இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறுவாரா வடக்கு தமிழன் விஜயராஜ்?

கிரிக்கெட்டை இலட்சியமாககொண்ட கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞன் விஜயராஜின் விருப்பம் இலங்கை கிரிக்கெட் குழுவில் இணையவேண்டும் என்பதாகும்.

குறித்த இளைஞன் பற்றி கடந்த மாதம் பெரும்பாலான ஊடகங்கள் செய்திவெளியிட்டு குறித்த இளைஞனை வெளிஉலகிற்கு அடையாளம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ் இளைஞனை அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக கொழும்பில் இவ் இளைஞனுக்கு இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய மற்றும் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நுவான் சொய்ஸா ஆகியோர் முதற்கட்ட பயிற்சிகளை வழங்கினர்.

”இவர் ஸ்ரீலங்கா அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அவ்வாறு விளையாடும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடும் முதல் தமிழ் இளைஞன் இவராக இருப்பார்” என்றும் சனத் ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.

விஜயராஜின் இலட்சிய பயணம் வெற்றியைநோக்கி ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டிருக்கின்றது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *