ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கித்சிறி செனரத் அத்தநாயக்க உயிரிழப்பு

ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கித்சிறி செனரத் அத்தநாயக்க இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவரின் பூதவுடல் இன்று (29 )மாலை கொழும்பிலிருந்து,பிபிலையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2ஆம் திகதி பிபிலையில் நடைபெறவுள்ளது.

இவர் 1999 ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைக்கு தெரிவாகியதுடன், மாகாண விவசாய, காணி, நீர், வடிகாலமைப்பு அமைச்சராகவும், 2004 மற்றும் 2014 ஆண்டுகளில் ஊவாமாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *