எட்டு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 8 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணம் செய்த 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மீனவர்கள் கடற்படையின் விசாரணையின் பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *