எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் – சுவிஸ்குமாரின் மனைவி சாட்சியம்

கடந்த 2015.05.08ஆம் திகதியிலிருந்து 2015.05.12ஆம் திகதி வரை எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் என வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி நேற்று மன்றில் சாட்சியமளித்துள்ளார்.

எதிரி தரப்பு சாட்சியங்கள் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று நடைபெற்றபோதே இவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.

இதன்போது, நான் சசிகுமாரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எமது திருமண வாழ்க்கை நன்றாகவே இருந்தது. அவர் வருடத்திற்கு ஒருமுறை நாட்டிற்கு வருவார். அவ்வாறு தான் 2015.04.05 அன்று இலங்கை வந்தார்.

2015.05.08 இல் இருந்து 2015.08.12 வரை, எனது கணவர் என்னுடன் வெள்ளவத்தையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். சசிந்திரன், துசாந்தன், சுவிஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.” என தெரிவித்திருந்தார்.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் அவரை குறுக்கு விசாரணை செய்த போது, 2015.05.08 அன்றிலிருந்து 2015.08.12 வரை உங்கள் கணவர் உங்களுடன் இருந்தமைக்கு சாட்சியம் இருக்கின்றதா? என்று கேட்டார். அதற்கு சுவிஸ்குமாரின் மனைவி “இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *