டெங்கு பரிசோதனையின்போது வசமாக மாட்டியது காஞ்சா

டெங்கு பரிசோதனையின்போது மீசாலை மடத்தடி பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 20 சிறிய காஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீசாலை பகுதியில் இன்று மு.ப. 10 மணியளவில் சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸார், படையினர் மற்றும் பிரதேச செயலகத்தினர் இணைந்து டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இடம்பெற்ற சோதனைநடவடிக்கையில் சிறுதளவு காஞ்சா விதை மற்றும் காஞ்சா விதை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த காஞ்சா செடிகள் வெண்டி செடிகளுக்கு அருகாமையில் நடப்பட்டு அவற்றுடன்சேர்த்து தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்டுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *