புகையிரத சில்லுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே குறித்த நபர் புகையிரதத்திலிருந்து இறங்கியுள்ளார். அவர் புகையிரத சில்லுக்குள் சிக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பிரபல தமிழ் பாட ஆசிரியர் மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *