போதைப்பொருளை விழுங்கி நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

போதைப் பொருள் அடங்கிய பொதிகளை விழுங்கி நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், விழுங்கிய 21 போதைப் பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து வந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வயிற்றில் மேலும் போதைப் பொருள் பொதிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் காரணமாக பொலிஸ் காவலுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *