மருதானை, மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு – இருவர் படுகாயம்

மருதானை, மாளிகாவத்தையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 மற்றும் 26 வயதான இளைஞர்களே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *