மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் துலானி எஸ்.வீரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரயன் ஜயலத், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *