முள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் விபத்து – சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் இருவர் பயணம் செய்தபோதே இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் தண்ணீரூற்று, ஊற்றங்கரையை சேர்ந்த து. நிசாந்தன் (வயது 34) என்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் வாகனத்தை செலுத்தியபோது, அவருக்கு அருகில் இருந்தவர் தவறி விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *