வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஓடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எவ்வித சமிக்ஞைகளுமின்றி தரித்து நின்றது. அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம் தரித்து நின்ற வாகனத்தின் மீது மோதியதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது தரித்து நின்ற வாகனம் தூக்கிவீசப்பட்டதுடன் குறித்த வாகனத்தில் இருந்த வன்னிமுத்து கிஸ்ணன் (வயது – 48) என்பவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *