Monthly Archive: August 2017

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு 254 ஆசிரியர்கள் தெரிவு

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு இவ்வருடம் 254 ஆசிரியர்கள் தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆசிரியர்கள் எட்டுப்பாடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆரம்பக்கல்வி – 148 இந்து சமயம் – 27 விவசாய விஞ்ஞானம் – 19 கணிதம் – 18 சங்கீதம் – 18 மனைப்பொருளியல் – 13 வர்த்தகவியல்...

0

சுற்றுலா வழிகாட்டுனர்களுக்கு அடையாள அட்டை

சுற்றுலா வழிகாட்டுனர்களுக்கு அடையாள அட்டையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வகையில் சுற்றுலா பயணிகள் கூடுதலாக வருகைதரும் பெந்தோட்ட, ஹிக்கடுவ மற்றும் அஹூங்கல்ல பிரதேசங்களை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டுநர்களுக்கு இவ்வாறு அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் அடையாள அட்டையை வைத்திருப்பதன்மூலம் சுற்றுலா வழிகாட்டுனர்கள்...

0

டெங்கு பரிசோதனையின்போது வசமாக மாட்டியது காஞ்சா

டெங்கு பரிசோதனையின்போது மீசாலை மடத்தடி பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 20 சிறிய காஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீசாலை பகுதியில் இன்று மு.ப. 10 மணியளவில் சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸார், படையினர் மற்றும் பிரதேச செயலகத்தினர் இணைந்து டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

0

ஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில்சென்று அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான மனோகணேசன், நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற...

0

எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் – சுவிஸ்குமாரின் மனைவி சாட்சியம்

கடந்த 2015.05.08ஆம் திகதியிலிருந்து 2015.05.12ஆம் திகதி வரை எனது கணவர் என்னுடன் கொழும்பில் இருந்தார் என வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி நேற்று மன்றில் சாட்சியமளித்துள்ளார். எதிரி தரப்பு சாட்சியங்கள் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று நடைபெற்றபோதே இவர்...

0

செப்ரெம்பர் 1ஆம் திகதி பொது வங்கி விடுமுறை – பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு

ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் 2ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளபோதிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல செப்ரம்பர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொது வங்கி விடுமுறையாக இருக்கும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 2ஆம் திகதி சனிக்கிழமை என்பதால் அன்றய தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டிய தேவையில்லை...

0

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

வடக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும். குறித்த பரீட்சையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மட்டுமேஉள்ளீர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பெறுபேறுகளை கீழே உள்ள இணையத்தளத்தில் பார்வையிடலாம் http://www.np.gov.lk/result/2017%20PPSC/Web%20Result%20D.O%20-%202017.pdf...

0

காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியவரவேண்டும் – இரா.சம்பந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார்

படையினரிடம் தங்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கடத்தப்பட்டவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியவர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஊடகங்களுக்கு...