Monthly Archive: September 2017

நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி 0

நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ என்ற காப்புறுதித் திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 5 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உரித்தாகும் இந்த காப்புறுதியை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. குறித்த காப்புறுதித்திட்டத்துக்கு அரசு 270 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது....

0

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு – சதோச ஊடாக விலைகுறைத்து விற்பனை

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம் சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

0

பரந்தனில் வாள்வெட்டு

இன்று மாலை பரந்தனில் நடந்த வாள்வெட்டில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். வாள் வெட்டு நடத்தியோர் இராணுவ முகாமின் ஊடாக தப்பிச்சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

0

கிழக்குப் பல்கலை மீண்டும் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக் கழக கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்துள்ளார். எனவே இறுதியாண்டு மாணவர்களை நாளை பல்கலைக்கழ மாணவர் விடுதிகளுக்கு வருமாறு அவர் அறிவித்துள்ளார். கிழக்குப்பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில்...

0

ஜனாதிபதி நியூயோக் விஜயம்

ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்வதற்காக ஜனாதிபதி தலை­மை­யி­லான குழு­வினர் இன்றுகாலை நியூயோக் விஜயம் செய்துள்ளனர். ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்­பமாகியுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தி பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது அமெ­ரிக்க...

0

காலி வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

மியன்மார் தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மியன்மார் தூதரகத்தின் முன்னால் சிலர் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

0

கடல்தொழிலாளர்கள் அவதானம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்கு வங்காளவிரிகுடாவின் கடற் பிரதேசத்தில் வலுவடைந்துவரும் தாழமுக்கத்தின் காரணமாக நாட்டைச் சுற்றியும் வங்காளவிரிகுடாவின் பெரும்பாலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்களாவிரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தை...

0

வித்தியாவின் கொலைவழக்கு தீர்ப்பு 27ஆம் திகதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைவழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்குத்தொடுநர் தரப்பு சாட்சியங்களும், இன்று எதிரிதரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரையும் இடம்பெற்றது. வித்தியா கொலைவழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களுக்கே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.