இணைய பாவனைக்கான 10 வீத வரி இன்றுமுதல் நீக்கம்

இணையத்தளத்தை பயன்படுத்த இதுவரை அறவிடப்பட்டு வந்த 10 வீத தொலைத் தொடர்பு வரி இன்று முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணையத்தள சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு இதுகுறித்து ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தள சேவைகளுக்கு மேலதிகமாக 10 வீத டேட்டாக்களை அதிகரித்து வழங்கவும் நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குறைந்த செலவில் இணையத்தளத்தை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *