இலஞசம் பெற முயன்றவருக்கு 20 ஆண்டு கடூழிய சிறை

இலஞசம் பெற முயன்ற குற்ற சாட்டில் அரச அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. விவசாயி ஒருவரிடம் பத்தாயிரம் ரூபா இலஞசம் பெற முயன்ற அதிகாரிக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் விவசாயம் செய்வதற்கு வன பகுதியை அளித்த சம்பவம் தொடர்பில் வழக்கு தொடராமல் இருப்பதற்கு இலஞசம் பெற முயன்றுள்ளதாகவும் குறிப்பிடப்பாடுகின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *