உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் ஒன்றுகூடும் பரீட்ச்சார்த்திகளை கைது செய்ய உத்தரவு

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பரீட்சை மத்திய நிலையங்களில் அல்லது அதற்கு அருகில் தேவையற்ற வகையில் கூடும் பரீட்ச்சார்த்திகளை கைது செய்யவும், அவர்களது அனைத்து பாடங்களுக்கான பெறுபேறுகளை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பரீட்சை மத்திய நிலைய கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *