உறவினர்கள் கோடரியால் தாக்கி குடும்பஸ்தர் பலி

வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய பாலையா சுதாகரன் என்பவரே குறித்த சம்பவத்தின்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா கிழவிகுளம் பகுதியை சேர்ந்த உறவினர்களான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *