உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரி முதல் வாரத்தில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடத்த முடியாது எனவும் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்திலேயே தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

முன்னதாக டிசம்பர் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் திட்டமிட்டிருந்தது. ஆனால் டிசம்பர் 12 ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகள் பரீட்சைத் திணைக்களத்தின் கீழ் வர வேண்டும் எனவும் பரீட்சை திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பரில் தேர்தல் நடத்துவதற்கு வேறு திகதி இல்லாததால் ஜனவரியிலே தேர்தல் நடத்த முடியும் எனவும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *