கடல்தொழிலாளர்கள் அவதானம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்கு வங்காளவிரிகுடாவின் கடற் பிரதேசத்தில் வலுவடைந்துவரும் தாழமுக்கத்தின் காரணமாக நாட்டைச் சுற்றியும் வங்காளவிரிகுடாவின் பெரும்பாலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்களாவிரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தை கொண்டதாக அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான ஆழமான கடல் மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் கொண்டதாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *