சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்

மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுவதால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்துடன் சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

மழை காரணமாக வீதிகள் வழுக்கல் தன்மையை கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *