சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக ஐந்து இலட்ச ரூபா நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும்; தொழிற்சாலைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அறுவடைசெய்யும் வரையில் சிறிய தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

தேயிலை, தெங்கு, றப்பர் உற்பத்திக்கான உரத்தை வழங்குவதற்காக அரசு 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உரமானியமாக 47 கோடி ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் 16 கோடி ரூபா காலி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *