தொடரும் மழையால் பாதிப்புக்கள் அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அதிக மழையின் காரணமாக இது­வ­ரையில் ஐந்து மாவட்­டங்­களை சேர்ந்த 899 குடும்­பங்­களைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 337 பேர் பாதி­க்கப்­பட்­டுள்­ளனர் என அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையின் விளை­வாக கடந்த சில தினங்­க­ளாக அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது.

காலி, களுத்­துறை, வவு­னியா, குரு­ணா­கல், பொல­ன­றுவை உள்­ளிட்ட ஐந்து மாவட்­டங்­களில் 899 குடும்­பங்­களைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 337 பேர் பாதி­க்கப்­பட்­டுள்­ளனர். மேலும் 374 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­து.

களு­கங்­கையின் நீர்­மட்­ட­மா­னது 115.7 மில்­லி­மீற்றர் அதி­க­ரித்­த­மை­யினால் இரத்­தி­ன­புரி மாவட்டம் மற்றும் அதனை அண்­மித்த பல பிர­தே­சங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

லக்­ஸ­பான நீர்த்­தேக்­கத்தின் மூன்று வான் ­க­த­வுகள் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளதால் கள­னி­ கங்­கையின் நீர்­மட்­டமும் 37 மில்­லி­மீற்ற­ரினால் அதி­க­ரித்­துள்­ளது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *