நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு மனு ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடகோரி அவரது மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டிசம்பர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கடற்படையினரை விடுதலை செய்ய உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், குமுதினி விக்ரமசிங்க, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *