நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி
பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ என்ற காப்புறுதித் திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
5 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உரித்தாகும் இந்த காப்புறுதியை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது.
குறித்த காப்புறுதித்திட்டத்துக்கு அரசு 270 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பான தேசிய வைபவம் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.