போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சரத் பொன்சேகாவே பொறுப்புக்கூறவேண்டும்

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவே பொறுப்புக்கூறவேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் போர்க்குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள அவர் கொழும்பு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு எதிரான போர்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இவர். இந்த குற்ற சாட்டுக்களுக்கு யாராவது பொறுப்பேற்கவேண்டுமென்றால் அந்த பொறுப்பு சரத் பொன்சேகாவுக்கே உள்ளது எனவும், ஏனென்றால் அவர்தான் அப்போது இராணுவத்தளபதியாக இருந்துள்ளார் எனவும் ஜெனரல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *