மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

காலி களுத்துறை இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குக்ளேகங்கை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 117 என்ற இலக்கம் மூலம் அவசர நிலமைகள் பற்றி அறிந்துகொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நதி நீர் மட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை உரிய பொலிஸ் நிலையங்களில் இதுதொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *