மாணவர்களுக்கான ‘சுரக்‌ஷா’ காப்புறுதி – ஒக்டோபர் முதலாம் திகதி நடைமுறைக்கு வருகிறது

45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குமான ‘சுரக்‌ஷா’ காப்புறுதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் நேற்று குறித்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சு சார்பாக அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சியும் இலங்கைக் காப்புறுதி கூட்டுதாபனத்தின் சார்பில்அதன் தலைவர் ஹேமக்க அமரசூரியவும் கைச்சாத்திட்டனர்.

அனைத்து அரசாங்க பாடசாலைகள், கல்வி அமைச்சிடமிருந்து உதவி கிடைக்கும் அல்லது கிடைக்காத தனியார் பாடசாலைகள், அரச சார்பான பாடசாலைகள், பிரிவெனாக்கள், சர்வதேச பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலைகளையும் சேர்ந்த தரம் ஒன்று முதல் தரம் 13 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அமுலாகும் வகையில் இக்காப்புறுதி நடைமுறைக்கு வரும்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் சர்வ​தேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 24 மணித்தியாலங்களும் நடைமுறைக்கு வரும் வகையில் இக்காப்புறுதியை அமுல்படுத்தவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *