மின்னல் தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி

கிளிநொச்சியில் இன்று பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் மனைவி பலியானதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூநகரி இரணைமாதா நகர் கிராமத்தைச் சேர்ந்த ரூபன் லட்டிசியா பிரதீபா (வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார்.

அவரின் கணவா் பீற்றர் ரூபன் (வயது 42) என்பவர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பலியானவர் ஆறு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் வீட்டின் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது இரண்டு முப்பது மணியளவில் ஏற்பட்ட மின்னனல் தாக்கத்திலேயே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *