விபத்தில் ஏழு மாணவர்கள் படுகாயம்

கொழும்பு -குருநாகல் பிரதான வீதியில் தவுல்தெனிய நால்ல பாலத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (08)காலை 6.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் தபதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற குறித்த வான் கெப் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த கெப் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளடன், பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *