வெலிமடை அடிப்படை வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு

வெலிமடை அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் காலவரையரையற்ற பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வைத்தியர்கள் கடமையில் ஈடுபடவேண்டிய குறித்த வைத்தியசாலையில் தற்போது 21 வைத்தியர்களே கடமையில் உள்ளார்கள். இது தொடர்பாக தாம் ஏற்கனவே பல முறை சம்மந்தபட்ட தரப்பினருக்கு தெரிவித்திருந்த போதிலும் அதற்கான தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாமையினால் தாம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வெலிமடை கிளையின் செயலாளர் நாமல் பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.

சம்மந்தபட்ட தரப்பினர் முன்வந்து வெலிமடை வைத்தியசாலைக்கு போதிய வைத்தியர்களை நியமித்து தரும் வரை தாம் இப்பணி பகிஷ்கரிப்பினை தொடரவுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *