5000 ரூபா தாள்கள் – தடைசெய்ய நடவடிக்கை

5000 ரூபா தாள்களை தடைசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பல இடங்களில் போலியாக அச்சிடப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்கள் பல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாணயத்தாள் அச்சிடும்போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை பின்பற்றப்படாமையாலேயே நாடுமுழுவதும் போலி நாணயத்தாள்கள் உள்ளதாக அரசாங்க அச்சுபொறித்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *