அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு

வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஒருகிலோ வெள்ளைப்பச்சரிசி 65 ரூபாவிற்கும் ,ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு சதொசவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இம்மாதத்தில் மேலும் 30 சதொச கிளைகள் திறக்கப்படவுள்ளதாகவும் கலாநிதி கே.பி.தென்னக்கோன் அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *