இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை

கடும் மழையின் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட மற்றும் எஹலியகொட பிரேதச செயலக பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கடந்த 24 மணித்தியாலங்கில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளது.

இவ்வாறு மழை தொடருமாயின் மண்சரிவு , சாய்வு இடிந்துவிழுகை , பாறை விழுதல், நிலவெட்டுச்சாய்வு , தரைஉள்ளிறக்கம் போன்றவை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *