குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை கொழும்பில்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் 24 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 3780 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் இம்மாதம் 11 ஆம் திகதி தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பிலான விபரங்களை திணைக்களத்தின் வெளிநாட்டு பரீட்சைகள் கிளையுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0112785230 / 0112177075 மற்றும் அவசர தொலைபேசி இலக்கம் 1911 மூலம் 24 மணித்தியாலங்களும் தொடர்பினை மேற்கொள்ளமுடியும்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *