தாயும் மகனும் கழுத்தறுத்து கொலை – ஏறாவூரில் கொடூரம்

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர்கள் ராஜா மதுவந்தி (26 வயது) மதுசன் (வயது 11) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலைசெய்யப்பட்ட இளம் தாயின் கணவன் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *