நாளைமுதல் மீண்டும் மழை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும்,நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு கடல் பிரதேசங்களிலும், காலை நேரத்திலும் மழை பெய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *