பேரூந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் உரிய நேர அட்டவணைக்குள் செயற்படாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொது முகாமையாளர் ஜெகத் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் சாரதிகள் தமது தூரங்களை உரிய நேரத்துக்குள் அடையவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இவ்வாற முறைப்பாடுகளை 0115559595, 0112871353, 0112871354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியும்.