யாழ் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40), கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30), நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் திகதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து, அரசியல் கைதிகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *