வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர – சரண்

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, பெற்றுக் கொள்ளப்பட்ட உயிரிழந்த வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலே முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வசீம் தாஜுதீனின் எலும்பு துண்டுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *