Monthly Archive: November 2017

0

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஆதரவாக வாக்களித்துடன், பொது எதிரணியும், ஜே.வி.பியும் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. இன்றைய...

0

பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாகவும், இதன்போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் தொகை உள்ளிட்ட விடயங்களை...

0

விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாரு பிரதமருக்கு அழைப்பு

  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாரு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை(20) ஆஜராகுமாறே பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பிரதான வீதி நாளை முதல் மூடப்படவுள்ளது 0

மட்டக்குளி பிரதான வீதி நாளை முதல் மூடப்படவுள்ளது

  குடிநீர் குழாய் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 15 மட்டக்குளி பிரதான வீதி மூடப்படவுள்ளது. ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை வரையான வீதி நாளை இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் குறித்த வீதியை...

0

மீத்தொட்டமுல்லை அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம்

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியாக நகர, திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் AIA லங்கா காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் இப்புலமைப்பரிசில்...

0

இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது

இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை வீர்ர்களால் குறிப்பிட்ட இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகு மற்றும் மின்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம்...

0

அவுஸ்திரேலிய கப்பல் கொழும்பை வந்தடைந்தது

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நியூ காஸ்ரல் எனும் பெயர் கொண்ட கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 4200 தொன் கொள்ளளவு கொண்ட குறித்த கப்பலில் 184 பேர் பணியாற்றுகின்றனர். குறித்த கப்பல் கொழும்பில் 4 நாள் தங்கியிருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த கப்பலின் சிப்பந்திகள் இலங்கை...

0

1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக நியமனம்

பட்டதாரிகள் உள்ளடங்கலாக 1904 பேருக்கு சமுர்த்தி அதிகாரிகளாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் நாளை காலை இடம்பெறவுள்ளது. சமூக ஊக்குவிப்பு சேமநலன் மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது....