கல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு

டிசம்பர் மாதம் இடம்­பெ­ற­வுள்ள 2017 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின் போது விசேட கண்­கா­ணிப்பு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கண்­கா­ணிப்பு அதி­கா­ரிகள் பலர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு விசேட கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பரீட்சைகள் திணைக்­களம் தீர்­மானம் எடுத்­துள்­ள­தா­க இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அவ்வகையில் கல்விப் பொதுத்தரா­தர சாதா­ர­ண­தர பரீட்சை இடம்­பெறும் பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் முறை­கே­டுகள் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்­கா­கவே இவ்­வா­றான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தாக இலங்கை பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.

டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­வுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை 21 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *