பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாகவும், இதன்போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் தொகை உள்ளிட்ட விடயங்களை வெளியிடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.