மீத்தொட்டமுல்லை அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம்

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியாக நகர, திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் AIA லங்கா காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் இப்புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

‘மெத்சரண’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் இன்று (16) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் 107 புலமைப்பரிசில்கள் இதன்போது வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வின்போது கேசர சமிந்து ஹேவாசிங்க என்ற மாணவரினால் எழுதப்பட்ட ‘சத்சரகேத் தம்சரகேத் அலுத் அவுருது கமன’ என்ற நூல் அம்மாணவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *