மேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்

மேல்மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த விண்ணப்பங்கள் மேல்மாகாணம் உள்ளிட்ட ஏனைய சகல மாவட்டங்களில் நிரந்தரமாக வசிக்கும் பட்டதாரிகளிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன.

அவ்வகையில் மேல்மாகாணத்திற்கு காணப்படும் வெற்றிடங்களுக்கு மேல்மாகாணத்திற்குள் நிரந்தரமாக வசிக்கும் விண்ணப்பதாரிகள் எழுத்துமூல போட்டிப்பரீட்சைக்கு சித்தியடையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் புள்ளிகளின் அடிப்படையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோர் நியமிக்கப்படுவார்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை இன்று(21) வெளியாகியுள்ள தினகரன் பத்திரிக்கையில் பார்வையிடலாம்.

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *