வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவ்வகையில் ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஆதரவாக வாக்களித்துடன், பொது எதிரணியும், ஜே.வி.பியும் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

இன்றைய விவாதத்தை தொடர்ந்து மாலை 5.20 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீது நடைபெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆரவாக 151 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் கிடைத்திருந்தன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *