Category: இலங்கை

0

மீத்தொட்டமுல்லை அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம்

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியாக நகர, திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் AIA லங்கா காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் இப்புலமைப்பரிசில்...

0

இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது

இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை வீர்ர்களால் குறிப்பிட்ட இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகு மற்றும் மின்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம்...

0

அவுஸ்திரேலிய கப்பல் கொழும்பை வந்தடைந்தது

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நியூ காஸ்ரல் எனும் பெயர் கொண்ட கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 4200 தொன் கொள்ளளவு கொண்ட குறித்த கப்பலில் 184 பேர் பணியாற்றுகின்றனர். குறித்த கப்பல் கொழும்பில் 4 நாள் தங்கியிருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த கப்பலின் சிப்பந்திகள் இலங்கை...

0

1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக நியமனம்

பட்டதாரிகள் உள்ளடங்கலாக 1904 பேருக்கு சமுர்த்தி அதிகாரிகளாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் நாளை காலை இடம்பெறவுள்ளது. சமூக ஊக்குவிப்பு சேமநலன் மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது....

0

பரீட்சைகள் திணைக்களத்தில் மாற்றங்கள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பரீட்சைகள் திணைக்களத்தில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மோசடிகள், ஊழல்கள் திணைக்களத்துக்குள் இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

0

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் பொருட்களின் விலை பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00 நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00 வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00 சிவப்பு மைசூர் பருப்பு ஒரு...

0

தேசிய கல்விக்கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தேசிய கல்விக்கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவ்விண்ணப்பங்கள் இன்றைய தினகரன் பத்திரிகையுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

0

நாளைமுதல் மீண்டும் மழை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும்,நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு கடல் பிரதேசங்களிலும்,...